உற்சவங்கள்
புஷ்கர பர்வம்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மகர ராசியில் குரு பெயர்ச்சி போது, துங்கபத்ரா சங்கமத்தில் "புஷ்கர பர்வம் " கொண்டாடப்படுகிறது. பர்வம் ஒரு மாதம் நீடிக்கும்.
ஸ்ரீ சங்கமேஸ்வரர் ரதோத்ஸவம்
சித்திரை மாச த்விதியை அன்று ஸ்ரீ சங்கமேஸ்வரர் ரதோத்ஸவம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 கி.மீ.க்கு உட்பட்ட மக்கள் மங்கள வாத்தியத்துடன் கிராம தேவதையை கொண்டு வருகின்றனர். இவ்வாறு வந்து துங்கபத்ரா சங்கமத்தில் தங்கள் கிராம தேவதைக்கு அபிஷேகம் செய்கிறார்கள். பஜனை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அவர்கள் தங்கள் கிராமத்திற்குத் திரும்புகிறார்கள்.
ஸ்ரீ சாரதாம்பா ரதோற்சவம்
புரட்டாசி மாதம் விஜய தசமி அன்று ஸ்ரீ சாரதாம்பா ரதோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஜகத்குரு முன்னிலையில் ஸ்ரீ மடத்தில் இருந்து ரதோற்சவம் தொடங்குகிறது. இந்த ரதோற்சவத்தில் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
வைகாசி மாச சுக்ல பக்ஷ தசமி அன்று சங்கர ஜெயந்தியாக பாரதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கூடலி சிருங்கேரி மஹா சம்ஸ்தானத்தில் ரதோற்சவம் கொண்டாடப்படுகிறது, இதில் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
ஸ்ரீ சங்கராச்சாரியர் மஹோற்சவம்
ஸ்ரீ பிரம்மேஸ்வரர் ரதோற்சவம்
ஆடி பௌர்ணமி அன்று ஸ்ரீ பிரம்மேஸ்வரர் ரதோற்சவம் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ சிந்தாமணி நரசிம்ம ரதோற்சவம்
கார்த்திகை பௌர்ணமி அன்று ஸ்ரீ சிந்தாமணி நரசிம்ம சுவாமி ரதோற்சவம் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ துர்கா பூஜோற்சவம்
தை மாத சுக்ல பக்ஷ, அன்று ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி பூஜோற்சவம் கொண்டாடப்படுகிறது.