கூடலி கிராமம் தென் பாரதத்தில் உள்ள கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சித்திக்ஷேத்திரம். இங்கு துங்கா மற்றும் பத்ரா ஆகிய இரு நதிகளும் சந்திக்கின்றன. புராணங்களில், இந்த இரண்டு நதிகளும் "யுக நதி" அல்லது "யமலா நதி" என்று அழைக்கப்படுகின்றன.
எனவே இந்த ஊர் "யமலாபுரி" என்றும் அழைக்கப்படுகிறது. சங்கமத்திற்குப் பிறகு, இந்த நதி "துங்கபத்ரா" என்று அழைக்கப்படுகிறது. கூடலி க்ஷேத்திரத்தின் மகிமை ஸ்கந்த புராணம், பவிஷ்யோத்தர புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த புராணத்தில் இந்த நதியின் பிறப்பு பற்றிய கதையும் உள்ளது. மகாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனைக் கொன்றார். பின்னர் அவர் சஹ்யாத்ரி பர்வத பகுதிக்கு வந்து, வராஹ ரூபத்தைத் துறந்து, பகவத்ரூபம் எடுத்தார். இந்த இடம் 'வேதபாதம்' என்று அழைக்கப்படுகிறது. (கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில், தற்போதைய குதிரைமுக சுரங்கப் பகுதியில் வேதபாதம் என்ற இடமும், வராஹமூல் என்ற பகுதியும் உள்ளது). அங்கு இந்த இரண்டு நதிகளும் வராஹ வடிவில் அதாவது பன்றியின் தந்தங்களைப் போன்ற பாறைகளில் இருந்து உருவாகின்றன.
ஸ்ரீ கூடலி க்ஷேத்திரம்
பண்டைய காலத்தில், அதாவது, துங்கை மற்றும் பத்ரை நதிகள் எழுவதற்கு முன்பு, தற்போது சங்கமிக்கும் இடத்தில், ஒரு பழமையான பொய்கை இருந்தது. அதைச் சுற்றி முனிவர்கள் மற்றும் முனிவர்களின் பல ஆசிரமங்கள் இருந்தன. அவர்கள் அனைவரும் தொடர்ந்து தியானம் செய்பவர்கள், திரிகாலஞானிகள் மற்றும் வேதவர்களாக இருந்தனர். ஒருமுறை ஸ்ரீமந்நாராயணர், கருடன் மற்றும் சித்தகந்தர்வருடன் பூலோகத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, இப்பகுதியில் உள்ள முனிவர்களைக் கண்டார். இங்குள்ள மங்களத்தினால் கவரப்பட்ட அவர், பிராமணர் வேடமிட்டு ஏரிக்கரையில் நிற்கிறார். அவருடன் வந்த சித்தர்கள், கந்தர்வர்கள், கருடன் ஆகியோர் அந்த பிராமணரின் சீடர்களாக வந்து நின்றனர். முனிவர்கள் அர்க்யபாத்யாதிகளைச் (நீர் வார்த்து) செய்து பிராமணரையும் அவரைப் பின்பற்றுபவர்களையும் வரவேற்று அவர்கள் வந்ததற்கான காரணத்தைக் வினவினார்கள்.
அப்போது பிராமணர் வேடத்திலிருக்கும் விஷ்ணு பகவான் கூறுகிறார், "நான் ஸ்வேத தீவில் வசிப்பவன், ரிஷிகள் மற்றும் முனிவர்களை தரிசிக்க வேண்டி என் நண்பர்களோடு சுற்றி வருகிறேன்". இங்கு பல ரிஷிகள் இருப்பதை கண்டும், பேரமைதியான இந்த குளமும், பசுமையான இயற்கை அழகும் நிறைந்த இந்த இடத்தில் ஒரு நாள் தங்க விரும்புவதாகவும் அதற்காகவே இங்கு வந்துள்ளதாக கூறுகிறார். அதை கேட்ட மாத்திரத்தில் முனிவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அகமகிழ்ந்தனர். அதோடு நில்லாமல் முக்காலத்தையும் உணர்ந்த இந்த முனிவர்கள், பிராமணர் வேடத்தில் வந்திருப்பது வேறு யாருமல்ல சாட்சாத் மகாவிஷ்ணு என்றும் உடனிருப்பது கந்தர்வகளே என்று தெரிந்து கொள்கின்றனர். பிறகு முனிவர்கள் பக்தி பெருக்குடன் மனமார போற்றி புகழ்ந்தனர்.
அம்முனிவர்களின் பக்தியை மெச்சிய விஷ்ணு பகவான், உடனிருப்போருடன் தன் வேடத்தை கலைந்து காட்சி தருகிறார்.
பண்டைய ரிஷ்யாஸ்ரமம் மற்றும் ஹரிஹர க்ஷேத்திரம்
அப்போது பிராமணர் வேடத்திலிருக்கும் விஷ்ணு பகவான் கூறுகிறார், "நான் ஸ்வேத தீவில் வசிப்பவன், ரிஷிகள் மற்றும் முனிவர்களை தரிசிக்க வேண்டி என் நண்பர்களோடு சுற்றி வருகிறேன்". இங்கு பல ரிஷிகள் இருப்பதை கண்டும், பேரமைதியான இந்த குளமும், பசுமையான இயற்கை அழகும் நிறைந்த இந்த இடத்தில் ஒரு நாள் தங்க விரும்புவதாகவும் அதற்காகவே இங்கு வந்துள்ளதாக கூறுகிறார். அதை கேட்ட மாத்திரத்தில் முனிவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அகமகிழ்ந்தனர். அதோடு நில்லாமல் முக்காலத்தையும் உணர்ந்த இந்த முனிவர்கள், பிராமணர் வேடத்தில் வந்திருப்பது வேறு யாருமல்ல சாட்சாத் மகாவிஷ்ணு என்றும் உடனிருப்பது கந்தர்வகளே என்று தெரிந்து கொள்கின்றனர். பிறகு முனிவர்கள் பக்தி பெருக்குடன் மனமார போற்றி புகழ்ந்தனர்.
அம்முனிவர்களின் பக்தியை மெச்சிய விஷ்ணு பகவான், உடனிருப்போருடன் தன் வேடத்தை கலைந்து காட்சி தருகிறார்.
ஸ்ரீ கூடலி மடத்தின் வரலாற்றுக் குறிப்புகளின்படி, கூடலி க்ஷேத்திரத்தில் அன்னை சாரதாம்பாவை பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் என்று கூறப்படுகிறது.
பிரம்மாவின் அவதாரமான மண்டன மிஸ்ராவையும், சரஸ்வதியின் அவதாரமும் மண்டன மிஸ்ராவின் மனைவியும் ஆன உபய பாரதி தேவியையும் வாதத்தில் தோற்கடிக்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர். தன் தோல்வியை ஒப்புக்கொண்ட மண்டன மிஸ்ரா, சந்நியாசியாக துறவு மேற்கொண்டு ஸ்ரீ சங்கரரின் சீடராகி சுரேஸ்வராச்சார்யா என்று பெயர் பெறுகிறார்.
தன் கணவர் சந்நியாசம் ஏற்று கொண்டதை அடுத்து, உபய பாரதி தேவி தன்னுடைய இருப்பிடத்திற்கு போக எண்ணுகையில் ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஸ்ரீ வனதுர்க்கை மந்திரத்தை உச்சாடனம் செய்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை அவர்களுடன் இருந்து தக்ஷிணாம்நாய பீடம் அமைய அருளவேண்டும் என வேண்டுகிறார். அவரின் வேண்டுதலை ஏற்று அன்னை சாரதாம்பாள், "நான் உன்னை பின்தொடர்வேன் அனால் நீ பின்னல் திரும்பி பார்க்கக்கூடாது. அப்படி திரும்பிப் பார்த்தால் அதே இடத்தில நான் நின்றுவிடுவேன்," என நிபந்தனை இடுகிறார்.
இதை ஏற்றுக் கொண்ட ஸ்ரீ சங்கரர் தென் திசை நோக்கி பயணிக்கிறார். துங்கபத்ரா நதி சங்கமத்தை அடைந்த ஸ்ரீ சங்கரர் அந்த க்ஷேத்திரத்தின் மகத்துவத்தையும், மேலும் அது எல்லோராலும் எளிதாக அணுகக்கூடிய இடமாக இருப்பதால் ஸ்ரீ சாரதா அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதை எண்ணி அவர் திரும்பி பார்க்கிறார். அதே இடத்தில் ஸ்ரீ சாரதாம்பாள் நின்று விடுகிறார். தேவியை நின்ற கோலத்தில் கண்ட ஸ்ரீ சங்கர பகவத்பாதாள், பிறகு அதே வடிவத்தில் அன்னை சாரதாம்பாள் சிலாரூபத்தில் பிரதிஷ்டை செய்கிறார். தக்ஷிணாம்நாய சாரதா பீடத்தின் பிரதான தெய்வமாக அம்பாளே அருள்பாலிக்கிறார். வருடங்கள் பல கடந்தும் இன்றும் அதே வடிவத்தில் அம்பாளை இந்த க்ஷேத்ரத்தில் காணலாம்.
ஸ்ரீ சாரதாம்பா கோவில்
அப்போது ஒரு நாள் காலை பொழுதில் நந்தவனத்தில் நடக்கையில் அவரை இரு நிழல் உருவங்கள் பின் தொடர்வது போல் தோன்றியது. அதில் ஒரு நிழல் ராமனின் உருவத்தை ஒத்து இருந்தது, மற்றொன்று குரங்கின் வடிவத்தில் இருந்தது. இந்த விசித்திரமான அனுபவத்தைக் கொண்ட ராமன், இதைப பற்றி வசிஷ்ட முனிவரிடம் சென்று கேட்டார் . குரங்கின் வடிவத்தில் இருப்பது வாலியின் உருவம் என்றார் வசிஷ்ட முனிவர். மேலும் அவர் ராமபிரானை துங்கபத்ரா நதி தீர்த்தத்திற்கு சென்று சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் வாலி பிரேத வடிவத்திலிருந்து விடுபடுவான் என்றார். அடுத்த கணமே ஸ்ரீ ராமன் வசிஷ்ட மஹரிஷியுடன் துங்கபத்ரா க்ஷேத்ரமான கூடலிக்குச் சென்று அங்கு புனித நீராடி , சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்தார். வசிஷ்ட ரிஷி அந்த லிங்க திருமேனிக்கு ஸ்ரீ ராமேஸ்வரர் என்று பெயர் சூட்டினார். அதன் தொடர்ச்சியாக வாலியின் ஜீவன் முக்தி அடைந்து, ஸ்ரீ ராமனை விட்டு விலகி விமானத்தில் விண்ணுலகம் சென்றது. அன்று முதல் பேய் பீடித்தவர்கள் துங்கபத்ரா சங்கமத்தில் நீராடி ஸ்ரீ ராமேஸ்வரரை பக்தியுடன் வழிபட அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பதாக ஐதீகம்
ஸ்ரீ ராமேஸ்வரர் கோவில்
இந்த ராமேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சக்தி கணபதி மற்றும் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி சன்னதிகள் உள்ளன. இந்த ராமேஸ்வரர் லிங்கத்தைப் ஸ்ரீ ராமபிரான் பிரதிஷ்டை செய்தார் என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதனோடு தொடர்புள்ள ஒரு புராண கதை உள்ளது. அயோத்தியின் மன்னராக முடிசூட்டிக்கொண்டு ஸ்ரீ ராமன் நியாய தர்மத்தின் படி ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.
க்ஷேத்திரத்தில் ப்ரஹ்லாதன் ஸ்ரீ நரசிம்மரை பிரதிஷ்டை செய்ததாக பவிஷ்யோத்தர புராணம் கூறுகிறது. இந்த விஷயத்தையும், கிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறிய இந்தத் தலத்தின் பெருமையையும் இந்தப் புராணம் கூறுகிறது.
ஹிரண்யகசிபுவின் மகனான ப்ரஹ்லாதன் தனது ராஜ்யத்தை மிகுந்த மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடன் ஆண்டுவந்தான். ஒருமுறை ப்ரஹ்லாதன் மந்தர உச்சாடனம் செய்து மஹாவிஷ்ணுவை அடைய மகாமந்த்ர உபதேசம் பெற எண்ணினார். அதற்காக காலவ ரிஷி ஆசிரமத்திற்கு சென்ற ப்ரஹ்லாதனை வரவேற்று, அமரவைத்து அவர் வந்த காரணத்தை கேட்டு அறிந்தார்.
மஹாவிஷ்ணுவின் பாதாரவிந்தத்தை அடைய பல காலமாக முயற்சிப்பதாகவும் அதற்கு மந்திரத்தை உபதேசிக்க வேண்டும் என்றார். காலவ ரிஷி முப்பத்திரண்டு சொற்களை கொண்ட ஒரு மந்திரத்தை சொல்ல, அந்த மந்திரத்தின் ரிஷியாக ப்ரஜாபதியும், காயத்ரி சந்தஸ், தேவதை ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என்றும் விவரித்தார். மேலும் அவர் பிரம்மா தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம் மற்றும் பல புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட துங்கபத்ரா தீர்த்த சங்கமத்தில் இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்துவர ஸ்ரீமந்நாராயணனை அடைய முடியும் என்றார்.
காலவ ரிஷியின் யோசனை படி யமலாபுரி க்ஷேத்திரமான கூடலி துங்கபத்ரா சங்கமத்திற்கு வந்த ப்ரஹ்லாதன், அங்கே புனித நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்து , தெய்வங்களை வழிபட்டார். பிறகு காலவ ரிஷி உபதேசித்த ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர் மூல மந்திரத்தை சொல்லியவாறு ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். அதன் பலனாக ஸ்ரீ நரசிம்மர் சாளக்ராம ரூபத்தில் அவர் முன் தோன்ற, அதை நீரிலிருந்து எடுத்து வந்து ஓரிடத்தில் வைத்து பூஜை செய்து வழிபட்டார். ப்ரஹ்லாதனின் பக்தியை பார்த்த ஸ்ரீ நரசிம்மர் தன் விஸ்வரூப தோற்றத்தில் காட்சி கொடுத்து வரமளிக்கிறார். ப்ரஹ்லாதன் ஸ்ரீ நரசிம்மரிடம், "நான் எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னுடைய பக்தனாகவே இருக்கவேண்டும், இந்த துங்கபத்ரா தீர்த்தத்தில் எப்போதும் உனது சாந்நித்யம் இருந்து அனைவரையும் அருள வேண்டும். உன்னை மனதார நினைப்பவருக்கு மோட்சத்தையும், அவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு சங்கிலியில் இருந்து விடுவித்து அவர்களின் ஆத்மா பேரானந்த நிலையை அடைய ஆசி வழங்க வேண்டும்,” என்று வேண்டுகிறான்.
ஸ்ரீ நரசிம்மர் வரத்தை அளித்து அந்த சாளக்ராம கல்லில் தன்னை ஐக்கியமாகிக் கொள்கிறார். அதில் மகிழ்ச்சியடைந்த ப்ரஹ்லாதன் தன் ராஜ்ஜியத்திற்கு திரும்பி செல்கிறான்.
மற்றும் ஒரு கதையும் பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. ப்ரஹ்லாதனின் பக்தியை கண்டு மகிழிச்சியடைந்த நரசிம்ம பகவான் சாளக்ராம கல்லில் இருந்து வெளிப்பட்டு தன் விஸ்வரூப தரிசனத்தை காட்டுகிறார். அத்தருணத்தில் ப்ரஹ்லாதன் " மனிதர்கள் வழிபட ஏற்றார் போல் ஒரு உருவத்தை எடுத்து அதில் உன் கீர்த்தி வெளிப்பட வேண்டும்" என வேண்டுகிறார். அந்த பிரார்த்தனையை ஏற்ற நரசிம்மர் ப்ரஹ்லாதனை தன் தலையில் கையை வைக்க சொல்கிறார், ப்ரஹ்லாதன் வலது கையை உயர்த்த சுவாமி குப்ஜாவதாரமான ஓர் சிறிய வடிவத்தை வீரசாசனத்தில் அமர்ந்தபடி எடுக்கிறார். அது ப்ரஹ்லாதனின் உள்ளங்கைக்கும் பூமிக்கும் இடையில் சரியாக பொருந்துகிறது. அத்தனை அற்புதமான சிறிய நரசிம்ம வடிவத்தை பார்த்த ப்ரஹ்லாதன், உணர்ச்சிவயத்தில் தன் கைகளை ஸ்வாமியின் தலையில் வைக்க அதனால் இன்று வரை ஸ்வாமியின் திருமேனியில் தலை பகுதி தட்டையாகவே உள்ளது. அதன் நடு பகுதி சற்று உயர்ந்து ஸ்ரீசக்ரமானது உள்ளது. ப்ரஹ்லாதனின் கைகளில் ஸ்ரீ சக்ரம் இருந்ததாகவும் அதுவே ஸ்வாமியின் தலை பகுதியில் பதிந்துவிட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு. இதன் காரணமாகவே ஸ்வாமிக்கு " ஸ்ரீசக்ர மூர்த்தி" என்று மற்றொரு பெயரும் உண்டு. சுவாமி ப்ரஹ்லாதனுக்கு கொடுத்த வாக்கின் படி தன் வலது கையில் சின்முத்திரையோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நரசிம்மரே இக்கோவிலின் பிரதான தெய்வமாக உள்ளார். அதன் பொருட்டு கூடலி க்ஷேத்ரத்தை “ஸ்ரீ நரசிம்ம க்ஷேத்ரம்” என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
சிந்தாமணி நரசிம்மர்
இந்த ப்ரம்மேஸ்வரர் விக்ரஹம் ப்ரதிஷ்டையானது பற்றி புராணத்தில் ஒரு கதை உள்ளது.
ஒரு முறை பிரம்மா சிவபெருமானின் அருளை பெறுவதற்கு தவம் மேற்கொள்ள எண்ணி துங்கபத்திரா சங்கம க்ஷேத்ரத்தை தேர்வு செய்தார். அங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தினமும் சங்கமத்தில் நீராடி, ஈர ஆடையோடு வழிபட்டு வந்தார். அங்கேயே தொடர்ந்து மூவாயிரம் ஆண்டுகள் சிவனை வழிபாட்டு பின் சித்தி அடைகிறார். ப்ரம்மாவின் பக்தியை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி அவரது விருப்பத்தை பூர்த்திசெய்தார். இந்த புண்ணிய நிகழ்வானது அஷ்வயுஜ சுக்ல பூர்ணிமா (ஐப்பசி வளர்பிறை பௌர்ணமி) தினத்தில் நடந்தேறியது. "இந்த இடத்தில் பகலும் இரவிலும் இங்கே இருப்பேன், இந்த தினத்தில் என்னை நினைத்து வழிபடுவோருக்கு அவர்களின் வேண்டுதலை பூர்த்தி செய்வேன்” என்றும் சிவபெருமான் வரமளித்தார்.
மேலும் திங்கட்கிழமையுடன் அமாவாசை இணைத்து வந்தால் அதற்கு முன்பாக வரும் சனிக்கிழமையன்று திரயோதசியில் (13 வது நாள்) பகல் நேரத்தில் விரதம் அனுசரித்து, மாலையில் பூஜை செய்து, மறுநாள் சதுர்தசி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். திங்கட்கிழமை அமாவாசை அன்று குளிகை நேரத்தில் சங்கம ஸ்நானம் செய்து ஈர ஆடையுடன் வந்து பிரம்மேஸ்வரரை வழிபட வேண்டும். அவ்வாறு செய்பவர்களும் சகல சௌபாக்யங்களும் அடைவார்கள் என்று சொல்லிவிட்டு சிவபெருமான் மறைந்துவிடுகிறார்.
ப்ரஹ்மாவுக்கு சிவபெருமான் நேரில் காட்சி கொடுத்ததை கொண்டாடும் விதமாக, இன்றும் அஷ்வயுஜ சுக்ல பூர்ணிமா தினத்தில் இந்த க்ஷேத்ரத்தில் ரத உற்சவம் நடைபெறுகிறது.
ப்ரம்மேஸ்வரர்
வித்யாசங்கரர் கோவில்
·சந்திரமௌலீஸ்வரர் கோவில்
·பவானிசங்கரர் கோவில்
மாத்ருபூதேஸ்வரர் கோவில் (அம்மாஜி சுவாமிகளின் அதிஷ்டானம்)
கிவுடா வெங்கண்ணேஸ்வரர் ஆலயம்
ராஜராமேஸ்வரர் கோவில்
ராமலிங்கேசஸ்வரர் கோவில்
காசி விஸ்வேஸ்வரர் கோவில்
சங்கமேஸ்வரர் கோவில்
ஆதி பைரவர் கோவில்
ராமேஸ்வரர் கோவில் (முன்னர் குறிப்பிடப்பட்ட நான்கு முக்கிய கோவில்களில் இதுவும் ஒன்று)
சிவபெருமானின் பல்வேறு ரூபங்களை கொண்ட மொத்தம் பதினொரு புராதனக் கோவில் கள் இப்பகுதியில் உள்ளன:
இந்த பதினொரு சிவன் கோவில்களைத் தவிர, இந்த க்ஷேத்திரத்தில் உள்ள பிற தெய்வ மூர்த்திகளுக்காக அமைக்கப்பட்ட சன்னதிகளும் உள்ளன:
கோதண்ட ராமஸ்வாமி கோவில் (சாரதாம்பாள் கோவிலின் வளாகத்திற்குள்)
கால பைரவேஸ்வரர் (பைரவர் மலையின் உச்சியில்)
ஸ்வயம்வர பார்வதி அம்மன் கோவில் (பிரம்மேஸ்வரர் கோவிலின் வளாகத்திற்குள்)
துர்கா தேவி கோவில் (கிராம தேவதை)